அமெரிக்கா அடாவடியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அமெரிக்க டிரம்ப் அரசின் அடாவடி வரிவிதிப்பை கண்டித்து சிபிஎம், சிபிஐ, சிபிஐ(எம்எல்) ஆகிய இடதுசாரி கட்சிகள் சார்பில் வேலூர் மண்டி வீதியில் சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.டி.சங்கரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஐ மாவட்ட இணை செயலாளர் சங்கர் மேஸ்திரி, சிபிஐ(எம்எல்) மாவட்ட துணை செயலாளர் ஏ.ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர். ராணிப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.ரகுபதி, வேலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.தயாநிதி, எஸ்.பரசுராமன், சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் எல்.மணி மாநகர செயலாளர் பி.சந்திரசேகர் சிபிஐ(எம்எல்) எஸ்.வாசுதேவன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.