வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டிசம்பர் 8 அன்று நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தத்திற்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் ஆகியோரிடம் ஒருங்கிணைப்புக்குழு மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் பொன்னையன், பெ.சண்முகம் ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இடதுசாரி கட்சிகளின் அகில இந்திய தலைவர்கள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய தலைவர்கள், போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்தனர்.