சீலப்பந்தல் கிராமத்தில் மனு கொடுக்கும் இயக்கம்
திருவண்ணாமலை,செப்.10- திருவண்ணாமலை அடுத்த சீலப்பந்தல் கிராமத்தில் மக்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. துரிஞ்சாபுரம் ஒன்றியம் சீலப்பந்தல் கிராமத்தில் ஒன்றியச் செயலாளர் கோ.பன்னீர்செல்வம் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ராமதாஸ், மாவட்டக் குழு உறுப்பினர் ச.குமரன், இடைக்குழு உறுப்பினர் கோபிநாத், கிளைச் செயலாளர் கோ.திருமலை வேங்கிக்கால் கிளைச் செயலாளர் எஸ்.ஆனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சீலப்பந்தல் கிராமத்தில் பக்க கால்வாய் அமைக்க வேண்டும், சீலப்பந்தல் கிராமத்தில் ஈசானிய மயானப்பாதையை சீரமைக்க வேண்டும், சீலப்பந்தல் கிராம மக்களின் முக்கிய பேருந்து நிறுத்தமான ஊசாம்பாடி பேருந்து நிறுத்தத்தில் வேலூர்-திருவண்ணாமலை பேருந்துகள் (தடம் எண் 125)நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தில் சட்ட கூலி ரூ.319 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை எழுப்பி கிராம ஊராட்சி செயலாளரிடம் மனு கொடுத்தனர்.