tamilnadu

இஸ்ரேல் குப்பம் மீன்பிடி படகுகள் நிறுத்துமிடத்தில் உயர்மின் கோபுரம் எஸ்.சசிகாந்த் செந்திலிடம் எம்பியிடம் மனு

இஸ்ரேல் குப்பம் மீன்பிடி படகுகள் நிறுத்துமிடத்தில் உயர்மின் கோபுரம் எஸ்.சசிகாந்த் செந்திலிடம் எம்பியிடம் மனு

திருவள்ளூர், ஜூலை 20- பழவேற்காடு அடுத்த இஸ்ரேல் குப்பத்தில் மீன்பிடி படகுகள் நிறுத்தும் இடத்தில்,  தொழிலுக்கு செல்லும் மீனவர் களுக்கு பயன்படும் வகையில் அங்கு உயர் மின் கோபுரம் மின் விளக்கு அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சசிகாந்த் செந்திலிடம் வியா ழனன்று (ஜூலை 18), மனு அளிக்கப்பட்டது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், திருவள்ளூர் தொகுதி மக்களவை உறுப்பினர் எஸ்.சசிகாந்த் செந்திலிடம் வழங்கப்பட்ட மனுவின் விவரம் வருமாறு. பழவேற்காடு அடுத்த இஸ்ரேல் குப்பத்தில்,  200க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தம் உள்ளது. இந்த மீன்பிடி நிறுத்த த்தில் மீன்பிடி தொழிலுக்கு இரவு பகல் என செல்கின்றனர். குறிப்பாக அதிகாலை மற்றும் இரவு  நேரத்திலும் தொழிலுக்கு சென்று வருவ தால், அங்கு இருள் சூழ்ந்து காணப்படு கிறது, மீனவர்களின் நலன் கருதி அங்கு  உயர் மின் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும்,  மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு  உட்பட்ட சிறுவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட  டி.எச்.ரோடு இலவம்பேடு, மற்றும் சிறு வாக்கம் பகுதியில் உயர் மின் கோபுரம் மின் விளக்குகள் அமைக்க வேண்டும், சோழவரம் அடுத்த மாதவரம் ஊராட் சிக்குட்பட்ட முஸ்லிம் நகரில் உயர்மின் கோபுரம் அமைக்க வேண்டும். கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள கவரப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளி யில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இடநெருக்கடி உள்ளதால், கவரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறை ஒன்றை  கட்டிக் கொடுக்க வேண்டும். கடம்புத்தூர் ஒன்றியத்திலிருந்து பல்வேறு கிராமங்களிலிருந்து தொடு காட்டில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடி யேறியுள்ளனர். அப்பகுதி மக்கள் குடும்ப நிகழ்ச்சிகள் நடத்த முடியாமல் அவதிப் படுகின்றனர். தொடுகாட்டில்,  இருளர் இன மக்களுக்கென சமுதாயக் கூடத்தை நாடாளு மன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டித்தர வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலி யுறுத்துள்ளனர். இறந்த மீனவர்  குடும்பத் திற்கு ஒன்றிய அரசு நிவாரணம் வழங்க வேண்டுகோள். பழவேற்காடு, வைரவன்குப்பம், ஆரணி யம்மன் தெருவை சேர்ந்த ரேணுகா கணவர் கஜேந்திரன் (வயது52),  என்பவர் 2022 செப்டம்பர் 16 அன்று கடலில் மீன் பிடிக்க சென்ற போது, படகு நிலைத்தடுமாறி விழுந்த விபத்தில் உயிரிழந்தார். இவருக்கு 3 பெண்  குழந்தைகள், ஒரு மகன் உள்ளார். குடும்பம் மிகவும் வறுமையில் உள்ளது. இந்த நிலை யில் ஒன்றிய அரசு நிவாரண நிதி தருமாறு  மனு வழங்கப்பட்டது. இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.தமிழ்அரசு, திரு வள்ளூர் மாவட்ட மீன்பிடி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி.நித்தியா னந்தம் மற்றும்  தாஸ்(சிஐடியு)  ஆகியோர் கலந்து கொண்டனர்.