tamilnadu

img

சட்டக் கூலி கோரி  மனு கொடுக்கும் இயக்கம்

சட்டக் கூலி கோரி  மனு கொடுக்கும் இயக்கம்

திருவண்ணாமலை, செப். 9- திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த காரம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் சட்டக் கூலி வழங்கக் கோரி மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. செவ்வாயான்று (செப்.9) நடைபெற்ற இந்த இயக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் கோரிக்கைகள் குறித்து மனு அளிக்கப்பட்டது. விவசாயக் கூலி தொழிலாளர்கள் அனைவரையும் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் இணைக்க வேண்டும், காரம் கிராமத்தில் கழிவு நீர் கால்வாய் அமைக்க வேண்டும், தெருவிளக்கு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் தலைவர்கள் மனு கொடுத்தனர். மாவட்டக் குழு உறுப்பினர் யாசர் அராபத் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ப. செல்வன், வட்டார செயலாளர் அப்துல் காதர், மாவட்ட குழு உறுப்பினர் எஸ். சுகுணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.