நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் மக்கள் தங்களது தீர்ப்பினை அளித்திருக்கிறார்கள்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கானாவில் பாரத் ராஷ்டிர சமிதியிடமிருந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
இந்த தேர்தல் முடிவுகள் இன்றைய தேவை என்ன என்பதை மிகத் தெளிவாக உணர்த்தியுள்ளன. மதச்சார்பற்ற சக்திகள் தங்களது முயற்சிகள் அனைத்தையும் இரண்டு மடங்காக அதிகரித்திட வேண்டும். மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்கவும், இந்திய குடியரசின் மதச்சார்பற்ற, ஜனநாயகப் பண்பினை பாதுகாக்கவும், அத்தகைய கூட்டு முயற்சி மேலும் தீவிரமாக்கப்பட வேண்டியது அவசியம் என்பதை தற்போதைய தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.