மலைப்பகுதிகளில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்
மார்க்சிஸ்ட் கட்சி தளி ஒன்றிய குழு சார்பில் மதகொண்டப்பள்ளி, மலைப்பகுதியான ஜவளகிரி உள்ளிட்ட கிராமங்களில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நடைபெற்றது. தளி ஒன்றிய செயலாளர் நடராஜன், செயற்குழு உறுப்பினர் சேகர்,மூத்த தோழர்கள் நாகராஜ் ரெட்டி,டி.எஸ்.பாண்டியன், புருஷோத்தமரெட்டி, மாவட்ட குழு உறுப்பினர்கள் அனுமப்பா,ராஜா, கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் ஒன்றிய அரசை கண்டித்து சிபிஎம் சார்பில் ஞாயிறன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தில் வட்ட செயலாளர் ஹரிகுமார் தலைமை தாங்கினார்.