tamilnadu

img

கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கு ஓய்வூதியம்: தொழிற்சங்கங்களுடன் அரசு குழு ஆலோசனை....

சென்னை:
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக அரசு அமைத்து குழுவினர் தொழிற்சங் களுடன் ஆலோசனை நடத்தியது.தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக தமிழ் நாடு மாநில கூட்டுறவு வங்கி (டிஎன் பிசிபி) மேலாண்மை இயக்குனர் ஆர்.ஜி. சக்தி சரவணன் தலைமையில் அரசு குழு அமைத்துள்ளது.இந்த குழு, ஒய்வூதியம் வழங்குவது தொடர்பான சாத்தியக் கூறுகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து வெள்ளியன்று (டிச.11) தொழிற் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தியது. இந்தக்கூட்டத்தில், சிஐடியு, எல்பிஎப், ஏடிபி, பெஃபி, ஏஐபிஇஏ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் நேரடியாகவும், டாக்பியா சங்கம் காணொலி வாயிலாகவும் கலந்து கொண்டது.

இதில் சிஐடியு, பெஃபி அமைப்புகளின் தலைவர்கள், மத்திய கூட்டுறவு வங்கிகள், ஆவின் உள்ளிட்டவைகளில் வழங்குவது போல் குறைந்தபட்ச ஓய்வூதித்தை வழங்க வேண்டும். அதற்கு தேவையான நிதி மூலதனத்தை உருவாக்க தமிழக அரசு நிதி வழங்க வேண்டும். கேரளாவை போல் ஓய்வூதிய குழுமம்  உருவாக்கி அரசு செயலர் மூலம் நிர் வகிக்க வேண்டும் அல்லது மாநில கூட்டுறவு வங்கி நிர்வகிக்க வேண்டும். கருணை ஓய்வூதியம் என்பது குறைந்தபட்ச ஓய்வூதிய
மாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தின.இந்த ஆலோசனைக்கு பிறகு அரசு குவின் தலைவர், தங்களது பரிந்துரைகளை துறைக்கும், அரசுக்கும் அளிப்பதாகவும் விரைந்து ஓய்வூதியம் கிடைக்க அனைத்து 
முயற்சிகளையும் மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

;