tamilnadu

மெரினாவில் பார்க்கிங் கட்டண வசூல் நிறுத்தம்

சென்னை, ஜூன் 3- சென்னை மெரினா கடற்கரையில் வாகன நிறுத்தக் கட்டணம் வசூல் நிறுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் வாகன நிறுத்தங்களை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, தியாகராய நகர் உள்ளிட்ட 170க்கும் மேற்பட்ட இடங்களில் அமைந்துள்ளது. இங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறு வனத்துக்கு மாநகராட்சி அனுமதி வழங்கி இருந்தது.

இருசக்கர வாகனங்களுக்கு 1 மணி நேரத்திற்கு  ரூ.5 , நான்கு சக்கர வாகனங் ங்களுக்கு ரூ.20  என கட்டணம் வசூ லிக்கவும் மாநகராட்சி உத்தர விட்டுள்ளது. ஆனால் இது தொடர்பான அறிவிப்பு பலகை மெரினா வாகன நிறுத்துமிடத்தில் எங்கும் வைக்கப்பட வில்லை. இந்நிலையில், மெரினாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆந்திராவை சேர்ந்த கார் ஓட்டுநரிடம் ரூ.300 கட்டணம் கேட்டுள்ளனர். அவர் தர மறுத்ததால் தாக்கியுள்ளனர்.

மெரினாவில் அண்மைக் காலமாக பேருந்து, வேன்களுக்கு ரூ.400 வரையும், கார்களுக்கு ரூ.100 முதல் ரூ.300  வரையும், 2 சக்கர வாகனங் களுக்கு ரூ.30 வரையும் கட்டணம் வசூலித்ததாகவும், அதற்கு ரசீது கொடுக்கவில்லை என்றும் பொது மக்கள் குற்றம் சாட்டினர்.

தற்போது இந்த தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் கட்டண வசூல் அனுமதி காலம் நிறை வடைந்த பிறகு வசூலில் ஈடு பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள் ளது. இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம் மெரினாவில் வாகன நிறுத்த கட்டண வசூலை நிறுத்தியுள்ளது. ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் வரை வசூலிக்க வேண்டாம் என்று வாய் மொழி உத்தரவு மூலம் தெரிவித்துள் ளதாகவும் கூறப்படுகிறது.

;