tamilnadu

img

3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

தமிழ்நாட்டில் தேனி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 
தமிழ்நாட்டின் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அதிகபட்சம் 20 சென்டி மீட்டர் வரை மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.