சென்னை:
பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருத செய்தியறிக்கை வெளியிடுவதற்கு கண்டனத்தைப் பதிவு செய்து,அதுகுறித்த ஆணையை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தமுஎகச சார்பில் தூர்தர்சன் சென்னை மண்டல இயக்குநரிடம் மனு அளிக்கப்பட்டது.பிரசார்பாரதி இயக்குநர் மனுவை தில்லிக்கு அனுப்புவதாக கூறினார். சமஸ்கிருத செய்தி ஒலிபரப்பை நிறுத்தவேண்டும். இது ஒரு மொழி வன்முறைஎன்றும் ஒளிபரப்பை நிறுத்தாவிட்டால் தமுஎகச அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கும் என்றும் வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது.மனு அளிக்கும் இயக்கத்தில் அன்பரசன், மயிலை பாலு, ராஜசங்கீதன், சிராஜுதீன், ராம்குமார் ரவிவர்மா உள்பட பலர் கலந்துகொண்ட னர்.