tamilnadu

img

‘ஆயிரம் கோடிக்குச் சமமடா, குழந்தாய்!’

தென்சென்னை சைதாப்பேட்டையில் வெள்ளியன்று மாலை நடைபெற்ற சிபிஎம் நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம், தாம்பரம் பகுதிக்குழு உறுப்பினர் செந்தில் முருகன் - தமிழ் ஆகியோரின் குழந்தைகள் ஆதித், ஜீவானந்தம் ஆகியோர் தங்களது சிறுசேமிப்பு உண்டியலை தேர்தல் நிதியாக அளித்தனர். சைதாப்பேட்டை பகுதி, கோட்டூர்புரம் கிளைச் செயலாளர் பிரகாஷ் - பிரியா ஆகியோரது மகள் இலக்கியா பாரதி தனது பிறந்தநாளையொட்டி 1000 ரூபாயை கட்சி நிதியாக வழங்கினார். அவற்றை பெற்றுக்கொண்ட கே.பாலகிருஷ்ணன், “சிறுவர்கள் இருவரும் அளித்த உண்டியல் நிதிக்கு எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடாகாது. பிறந்தநாளையொட்டி கொடுத்த ஆயிரம் ரூபாய் 1000 கோடிக்கு சமம்” என்று கூறி நெகிழ்த்து பாராட்டினார்.