tamilnadu

img

ஓ.எம்.ஆர். புத்தகத் திருவிழா தொடங்கியது

சென்னை, ஏப். 23 - ஓஎம்ஆர் புத்தகத் திருவிழா செவ்வாயன்று (ஏப்.23) பெருங்குடி சுங்கச்சாவடி அருகே உள்ள வள்ள லார் சன்மார்க்க அரங்கில் தொடங்கி யது. மாவட்ட அளவில் நடைபெறும் பெரிய புத்தகக்காட்சிகளை தொடர்ந்து உள்ளூர் அளவிலான புத்தகக்காட்சிகள் வாசகர்களை கவர்ந்திழுக்கின்றன. இதனால் எளிய  மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று வருகின்றன. அதற்கு ஏராள மான முன்னுதாரணங்கள் உள்ளன.

சமூகம், காலம் காலமாக உருவாக்கி வைத்துள்ள அறிவுக்கொடையை அடுத்த தலைமுறைக்கு கடத்து வதும், மக்களின் மனங்களில் கொண்டு சேர்ப்பதும் முக்கிய மானது. “உள்ளூர் புத்தகக் காட்சி களை சென்னையின் ஒவ்வொரு பகுதியிலும் நடத்த வேண்டும். வாய்ப்பிருந்தால் அடுக்குமாடி குடியிருப்புகள் தோறும் நடத்த வேண்டும்” என்று எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் வேண்டுகோள் கவனிக்கதக்கது.

“தகவல் தொடர்பு சாதனங்கள் வளர்ந்து வரும் இக்கால கட்டத்தில் புத்தக வாசிப்பு குறையாமல் பார்த்துக் கொள்வதும், அதை வளர்த்தெடுப்பதும் மனித குல விடுதலையை நேசிக்கும் அனை வரின் பொறுப்பாகும். உள்ளூர் அள வில் நடைபெறும் புத்தகக்காட்சிகள் வாசகர்களின் வாசிப்பை மேலும் மேலும் ஊக்குவிக்கின்றது. புத்தகங்களை நோக்கி வாசகர் கள் வர வேண்டும் என்பதையும் தாண்டி, வாசகர்களை நோக்கி புத்தகங்களை கொண்டு செல்வது மகிழ்ச்சியளிக்கிறது.

சிறு புத்தக விற்பனைக்காட்சி என்று மக்கள் இவற்றை புறந்தள்ளுவதில்லை. வாசகர்கள் தரும் ஒத்துழைப்பும், பரி வும் தமிழ்ச்சமுதாயம் வாசிப்பி லும் முதிர்ச்சி பெற்று வருவதையே காட்டுகிறது” என்று ஏற்பாட்டா ளர்கள் தெரிவித்தனர். வீட்டிற்கு, வாசகனுக்கு மிக நெருக்கமாக புத்தகத்தை கொண்டு செல்லும் வகையில் இந்நிகழ்வு நடத்தப்படுகிறது. தொலைக்காட்சி, இணையங்கள் வாசிப்புக்கான தூண்டுதலாகவே உள்ளன. குழந்தைகளையும், சிறுவர் களையும் வாசிப்பு பழக்கத்திற்கு உட்படுத்த உள்ளூர் புத்தக் காட்சிகள் மிக அவசியம்” என்று ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் குறிப்பிடு கிறார்.

அந்த வகையில், புத்தகங்களை மக்களிடையே கொண்டு செல்லும் பெரும் இயக்கத்தை 20 ஆண்டு களுக்கும் மேலாக பாரதி புத்த காலயம் செய்து வருகிறது. தமிழ்நாடு அரசு மாநிலம் முழு வதும் புத்தக்காட்சியை நடத்து வதற்கு முன்பிருந்தே, பள்ளி, கல்லூரி, சிறுசிறு ஊர்களில் புத்தகக்கண்காட்சி, மாவட்ட அள வில் புத்தகத் திருவிழாக்கள் நடத்து வதை பெரும் இயக்கமாக பாரதி புத்த காலயம் செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக உலக புத்தக தினமான ஏப்.23ந் தேதி, ஓஎம்ஆர் புத்தகத்திருவிழா தொடங்கியது.

2019ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வரும் இந்த புத்தகத்திருவிழா கொரோனா காலத்தில் தடைபட்டது. இதனை கடந்து 3 ஆவது ஆண்டாக நடை பெறும் இந்த புத்தகக் காட்சியை பாரதி புத்தகாலயம், புக்ஸ் பார் சில்ட்ரன், சிஐடியு, தமிழ்நாடு அறி வியல் இயக்கம், தமுஎகச  ,யுனைட், சோழிங்கநல்லூர் குடியிருப்போர் நலச் சங்கங்களின் பேரமைப்பு, ஓஎம்ஆர்  சிறீ சாய்நகர் குடி யிருப்போர் நலச்சங்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், சென்னை யூத் சென்டர் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன.

பேராசிரியர் வி.முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த புத்தகத் திருவிழாவை தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் க.அறிவொளி தொடங்கி வைத்தார். புத்தக விற்பனையை தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத்  தலைவர் (பபாசி) சேது சொக்க லிங்கம் தொடங்கி வைக்க, இயக்கு நர் சீனுராமசாமி நூலை வாங்கிக் கொண்டார். ஆயிஷா நடராசன் சிறப்புரை யோடு நடைபெற்ற இந்த நிகழ்வில், பாரதி புத்தகாலயம் பதிப்பாளர் க.நாகராஜன், சோழிங்கநல்லூர் குடியிருப்போர் நலச் சங்கங்களின் பேரமைப்பு பொதுச்செயலாளர் வி.பார்த்திபன், க.உதயகுமார் (தமுஎகச), வெல்கின் (யுனைட்), க.மலர்விழி (தமிழ்நாடு அறிவியல் இயக்கம்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த புத்தகக்காட்சியில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. மே 2ந் தேதி வரை நடைபெறும் இந்த புத்தகக் காட்சி, காலை 10 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும். புத்தகக்காட்சிக்கு வருவோருக்கு நுழைவு கட்டணம் கிடையாது. புத்தகங்களுக்கு 10 விழுக்காடு கழிவு வழங்கப்படுகிறது. இந்த புத்தகத் திருவிழாவை யொட்டி குழந்தைகளுக்கு ஏப்.27, 28 தேதிகளில் புத்தகக்காட்சி அரங்கில் ஓவியப் போட்டி நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு: 9444386494, 8778961607