வலைகளில் சிக்கிய ஆலிவ் ஆமைகள்: மீட்டது காவல்படை
சென்னை,செப்.10 மன்னார் வளை குடாவில் கடலோர காவற்படை யின் வஜ்ரா கப்பல், கண்காணிபு பணியில் ஈடுபட்டிருந்த போது வலையில் சிக்கிய நான்கு ஆலிவ் ரிட்லி ஆமைகளை மீட்டது. இந்த முயற்சி, இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972 இன் அட்டவணை I இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள இந்த அழிந்து வரும் உயிரினத்தைப் பாதுகாப்பதில் இந்திய கடலோர காவல்படையின் நீடித்த அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுவதாக அந்த படையின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.