ஆன்லைன் வகுப்புகள் 5 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகள் ஆன்லைன் வழியாக பாடங்களை நடத்தி வருகின்றன. இதனால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவதாக குழந்தை நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் 21 ந்தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 நாளிலும் ஆன்லைன் வகுப்பு நடக்கிறதா என பிளாக்லெவல் அலுவலர்கள் ஆய்வு நடத்துவர். மேலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து சூழலில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ச