tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி, ஜூலை 22 -  தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன் வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஓய்வூ தியம் உயர்த்தக் கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சட்டப்படியாக குறைந்தபட்ச ஓய்வூதி யம் ரூபாய் 7,850 வழங்க வேண்டும் அல்லது சங்கத்தின் கோரிக்கையான ரூபாய் 6,750 ஓய்வூதியம் வழங்க வேண்டும் அல்லது உயர் நீதிமன்ற ஆணைப்படி ரூபாய் 1,500-க்கு பதிலாக ரூபாய் 3,855 ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஒப்பாரி போராட்டம் கள்ளக்குறிச்சி ஒன்றிய தலைவர் முத்துக்குமாரசாமி தலைமை தாங்கினார். தியாகதுருகம் ஒன்றிய தலைவர் சம்பத்  குமார் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் பொன்னுசாமி, ஊரக வளர்ச்சி துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செய லாளர் ஜார்ஜ் வாஷிங்டன் ஆகியோர் கோரிக் கைகளை வலியுறுத்தி உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் பெண் ஓய்வூதியர்கள் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு, ஒப்பாரி வைத்தபடி கோஷங்களை எழுப்பினர். மாவட்ட பொருளாளர் கண்ணன், நிர்வாகிகள் கேசவ முத்து, உண்ணாமலை மற்றும் சத்துணவு, அங்கன் வாடி ஓய்வூதியர்கள் பலர் கலந்து கொண்ட னர்.

ஐக்யூஓஓ இசட் 10 ஆர் செல்பேசி: ஜூலை 24-ல் அறிமுகமாகிறது

சென்னை, ஜூலை 22 - உயர் செயல்திறன் கொண்ட செல்பேசிகள் தயாரிப்பில் முன்னணி பிராண்டாக திகழும் ஐக்யூஓஓ நிறுவனம்,  தனது புதிய இசட்10ஆர் செல்பேசியை வரும் 24-ந்தேதி அறிமுகம் செய்கிறது.    மாணவர்கள் மற்றும் சமூக வலைதள பயனர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த செல்பேசியில், 4கே முன் மற்றும் பின்புற கேமரா, அல்ட்ரா-ஸ்லிம் குவாட்-வளைந்த டிஸ்பிளே மற்றும் இந்தப் பிரிவில் முன்னணியில் இருக்கும் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 புராசசர் உடன் வெளிவருகிறது. இதில் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 882 ஓஐஎஸ் பிரதான கேமரா, 32எம்பி 4கே முன் கேமரா என  அதிநவீன கேமராவைக் கொண்டுள்ளது. இது பயனர்களின்  பயணத்தின்போது மகிழ்ச்சியான மற்றும் மன நிம்மதியான  வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் என்று அந்நிறுவனத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.