சென்னை:
மின் உற்பத்திக்கு பயன்படாமல் நிவர் புயல் சேதங்களையே ஏற்படுத்திச் சென்றுள்ளது.வங்கக் கடலில் நவம்பர் 21 அன்று உருவாகி வலுப்பெற்ற அதி தீவிர நிவர் புயல் புதுச்சேரிக்கும்-மரக்காணத்துக்கும் இடையே கரையை கடந்தது. நிவர் புயல் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்தது. புயல்கரையை கடக்கும் போது வீசும் சூறாவளிக் காற்றால் காற்றாலை மின்சார நிலையங்களில் மின்சாரம் உற்பத்தியாகும். சராசரியாக இதுபோன்ற புயல் காலங்களில் 1,500 முதல் 2 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களிலே அனைத்து காற்றாலைகள் உள்ளன. ஆனால் நிவர்புயல் வட மாவட்டங்களில் வீசியதால் , காற்றாலை களுக்கு பயனளிக்காமல் வீணானது.சேதங்களையே ஏற்படுத்திச்சென்றுள்ளது என்று எரிசக்தி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.