tamilnadu

img

நிவர் புயலால் 3 பேர் உயிரிழப்பு, 101 வீடுகள் சேதம் - அமைச்சர் தகவல் 

நிவர் புயல் கரையை கடந்துள்ள நிலையில் காலை நிலவரப்படி 3 பேர் உயிரிழந்துள்ளனர் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் குடிசை வீடுகள் உட்பட 101 வீடுகள் இடிந்து சேதமானதாக விபரங்கள் கிடைத்துள்ளது. இந்தச் செத்த மதிப்பு மேலும் உயரக்கூடும் எனத் தெரிகிறது. நேற்று மாலை முதல் இன்று காலை வரை தமிழகம் முழுவதும் 380 மரங்கள் குறைந்துள்ளது. அவைகள் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இதேபோல, விளைபயிர்கள் குறித்து செத்த மதிப்புகள் கணக்கிடப்பட்டு வருகிறது.

நிவர் புயல் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் பற்றிய முழு விவரம் இன்னும் அரசுத்தரப்பில் வெளியிடப்படவில்லை. தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை விட நிவர் புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே வேளையில் புதுச்சேரி மாநிலத்திற்கு இந்த நிவர் புயல் பெரியளவில் சேதத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும் எனத் தெரிகிறது. இதனிடையே தமிழகம் முழுவதும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைக்கப்பட்ட 3,085 முகாம்களில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 317 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை தெரிவித்த விபரங்களின் படி இந்த தகவல்களை அளித்துள்ளனர். மீண்டும் இது அதிகரிக்க வாய்ப்புள்ளது.

;