tamilnadu

img

நிவர் புயல் பாதிப்பு: தமிழக அரசு ரூ.74 கோடி ஒதுக்கீடு...

சென்னை:
நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க முதற்கட்டமாக ரூ.74.24 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.தமிழகத்தில் கடந்த மாதம் புதுச்சேரி அருகே கரையை கடந்த நிவர் புயலால் விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்துள்ளனர்.இந்த நிலையில் நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க முதற்கட்டமாக ரூ.74.24 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.நிவர் புயலால் சேதமடைந்த வீடுகள், நீர்நிலைகள், சாலைகள், மின்கம்பங்கள் உள்ளிட்டவற்றை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

;