tamilnadu

img

முதல்வர் பாதுகாப்புக்கு புதிய இனோவா கார்கள்

சென்னை,ஜன.1- தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாது காப்புக்காக வாங்கப்பட்ட ஆறு புதிய இனோவா கிரிஸ்டா கருப்பு நிற கார் கள் ஜன.1 முதல் பயன் பாட்டுக்கு வந்துள்ளன.

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாது காப்புக்காக ஆறு புதிய  இனோவா கிரிஸ்டா கருப்பு நிற கார்கள் வாங்கப் பட்டன. இந்த கார்கள் திங்கட்கிழமை (ஜன.1) முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

இவற்றில் நவீன கேமராக்கள், ஜாமர் கருவிகள், பாதுகாப்பு படை வீரர்கள் வண்டியின் வெளிப்புறத்தில் நின்று செல்ல சிறப்பு படிக்கட்டுகள் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

புத்தாண்டு பிறப்பை யொட்டி, இந்த புதிய கார்களை முதல்வரின் பாது காப்பு படை வீரர்கள் பயன்படுத்தத் தொடங்கி யுள்ளனர்.