புதன், பிப்ரவரி 24, 2021

tamilnadu

img

புதுவையில் சாலைகளை சீரமைக்க நூதன போராட்டம்

புதுச்சேரி, ஜன. 18- குண்டும் குழியுமான சாலைகளை போர்கால அடிப்படையில் சீர்செய்யக் கோரி விண்வெளி வீர்ர்  உடை அணிந்து  புதுவை யில் நூதனப் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி லாஸ்பேட் தொகுதிக்குட்பட்ட அசோக் நகர், குறிஞ்சிநகர், குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் நீண்ட காலமாக குண்டும் குழியு மாக உள்ளதைக் கண்டித் தும், சாலைகளை உடனே போர்கால அடிப்படையில் சீர்செய்யக் கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர்  சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் இந்த நூத னப் போராட்டம் நடை பெற்றது. இதில் வாலிபர் சங்க பிர தேச தலைவர் ஆனந்து, மாணவர் சங்க பிரதேச தலைவர் ஜெயபிரகாஷ், டிஒய்எப்ஐ உழவர்கரை நகரத் தலைவர் சஞ்சய், செய லாளர் வினோத், கிளைத் தலைவர் நிஷாந்த், செயலா ளர்  சச்சின், மற்றும் நிர்வாகி கள் ஈஸ்வர், விஷ்வா, கௌதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விண்வெளி வீரர்களின் உடை அணிந்து, விண்வெளியில் நடப்பதைப் போல் நடந்தது அப்பகுதி மக்  களை வெகுவாகக் கவர்ந் தது. இந்த பகுதிகள் சட்டப்  பேரவைத் தலைவர் சிவக் கொழுந்துவின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. 

;