tamilnadu

img

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி போதுமானதாக இல்லையா? அமைச்சர் விளக்கம்

சென்னை, செப். 12- அரசுப் பள்ளி மாண வர்களுக்குபோதிய நீட் பயிற்சி வழங்க வில்லை என்ற குற்றச் சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரி வித்தார். சென்னை சேத்துப்பட் டில் உள்ள தனியார் பள்ளி யில் நடைபெற்ற பாரத  சாரண, சாரணியர் விருது வழங்கும் விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில்  மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று மாநில  பாரத சாரண, சாரணியர் இயக்கத் தலைவராக பொறுப் பேற்றுக் கொண் டார். அதனைத் தொடர்ந்து மாநில முதன்மை ஆணை யராக பள்ளி கல்விக் துறை  ஆணையர் நந்தகுமார் பொறுப் பேற்றுக் கொண் டார். பின்னர், பாரத சாரண, சாரணியர் இயக்கத்தில்  சாதனை புரிந்தவர்களுக்கு பள்ளி கல்வித் துறை அமைச் சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி விருது களை வழங்கி கவுரவித்தார். அதன்பிறகு செய்தி யாளர்களிடம் அமைச்சர் பேசுகையில், “சாரணர் இயக்கத்தில் தற்பொழுது 4 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.

இதை 10 லட்சம் என்ற  எண்ணிக்கை அடைவதை  இலக்காக வைத்துள்ளோம்.  சாரணர் இயக்க மாணவர்க ளுக்கு மாவட்ட, மாநில தேசிய அளவில் முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார். நீட் தேர்வு விலக்கு பெறு வதற்கு சட்டப் போராட்டம் நடந்து வருகிறது. நீட் தேர்வு விலக்கில் வெற்றி பெறும் வரை நீட் தேர்வுக்கான பயிற்சி தொடர்ந்து தவறா மல் வழங்கப்படும். 4,000  அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தகுதி பெற்றுள் ளார்கள். அது எங்களுக்குப் போதாது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போதிய நீட் பயிற்சி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை என்னால் ஏற்க முடியாது. 2 வருடங்களாக பள்ளிக்கூடம் திறக்கப்படுமா மற்றும் பொதுத் தேர்வு நடை பெறுமா என்ற நிலை இருந் தது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தடைகளை உடைத்து சாதாரணமாக பள்ளிகள் நடைபெற்று வருகிறது என்றும் அமைச்சர் கூறினார்.

;