சென்னை, மார்ச் 14- அமைச்சர் ஐ.பெரிய சாமி, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறை யீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2008-ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஐ. பெரியசாமி மீது, கடந்த 2012-ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சியின் போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ. பெரியசாமியை விடுவித்து சென்னை எம்.பி - எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசா ரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது. ஆனால், இந்த தீர்ப்பை தாமாக முன்வந்து மறு ஆய்வு செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த், சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்த ரவை ரத்து செய்தார்.
இந்நிலையில், அமைச்சர் ஐ. பெரியசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், சரியான கார ணங்களை ஆய்வு செய்யாமல் தனி நீதிபதி இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ளார். எனவே, சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.