திருவண்ணாமலை,ஏப்.6-திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள ஜவ்வாது மலை பகுதியில் செய்யாறு உ ருவாகிறது. திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை கடந்து பாலாற்றுடன் இணைந்து கடலில் கலக்கிறது. இதில் செங்கம் பகுதியில் உள்ள மருத்துவமனைகள், நீண்டகாலமாக செய்யாறு பாலத்திற்கு கீழே, மருத்துவக் கழிவுகளை கொட்டிவருகின்றன. இதனால், செங்கம் பகுதி பொதுமக்கள், கடும் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டி தெரிவித்துள்ளனர்.செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் இந்த ஆற்றில், செங்கம் பகுதியில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்கள், இரத்தப் பாரிசோதனை நிலையங்களில் நோயளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த ஆறு புதர்மண்டிக் கிடந்தது. ஆக்கிமிப்பு, கழிவுநீர் கலப்பாலும், இறைச்சி கழிவுகளாலும் ஆறு கால்வாயாக மாறிப்போயிருந்தது. கடந்த ஆண்டு இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், செங்கம் பகதியில் உள்ள செய்யாற்றில் இருந்த கழிவுகளையும், புதர்களையும் அகற்றி தூய்மைப்படுத்தினர்.இந்நிலையில் மீண்டும் இதில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவது குறித்து செங்கம் போரூராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.