tamilnadu

img

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை,நவ.3- தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காதது  ஏன் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி  எழுப்பியுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக  2018ல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்த தேசிய  மனித உரிமை ஆணையம், அதன்  புலனாய்வுப் பிரிவு அறிக்கையின் அடிப்படை யில், தமிழ்நாடு அரசின் அறிக்கையின் அடிப்படையில் வழக்கை முடித்ததை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்றி திபேன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக 17 அதிகாரிகள்  மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்த நிலையில், அரசு எந்த மேல் நடவடிக்கை யும் எடுக்கவில்லை என தெரிவித்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ‘நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம்’ அளித்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினர். மேலும் இது தொடர்பாக  தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதுடன் இந்த வழக்கை நவம்பர் 17க்கு ஒத்திவைத்தனர்.