tamilnadu

img

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு

சென்னை, ஜூன் 2-  மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படு கிறது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதி களில் பதிவான வாக்குகள், விளவங் கோடு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப் பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இதையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங் களில் தலா 1000 போலீசார் பாதுகாப்பு  ஏற்பாடுகளை கவனிக்க உள்ளனர். இதன் மூலம் வாக்கு எண்ணும் மையங்களில் மட்டும் 40 ஆயிரம் போலீசார் பாது காப்புக்காக நிறுத்தப்படுகிறார்கள்

. ஒவ்வொரு வாக்கு எண்ணும் மை யத்தில் ஆயுதப்படை போலீசார், சிறப்பு காவல் படை போலீசார் ஆகியோர் கூடுத லாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். துப்பாக்கி ஏந்திய 15 கம்பெனி துணை ராணுவப் படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட உள்ளனர்.

இதன் மூலம் வாக்கு எண்ணிக்கை நாளில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாத வகையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன. வாக்கு எண்ணும் மையங்களை தவிர்த்து மற்ற இடங்களில் சுமார் 60 ஆயிரம் போலீசார் ரோந்து சுற்றி  வரு வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய அரசியல் கட்சிகளின் அலு வலகங்கள், பொது இடங்கள், வழி பாட்டுத்தலங்கள் உள்ளிட்டவற்றில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதன் மூலம் மாநிலம் முழு வதும் நடைபெற உள்ள வாக்கு எண்ணி க்கைக்கு 1 லட்சம் போலீசார் பாது காப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிந்து மையங்களில் பரபரப்பு அடங்கி இயல்பு  நிலை திரும்பிய பிறகு போலீசார் மை யங்களை விட்டு வெளியேற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

;