tamilnadu

img

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்,  அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்க உள்ளாட்சித் துறை ஊழியர்கள் வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்,  அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்க உள்ளாட்சித் துறை ஊழியர்கள் வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி, செப்.18- கிருஷ்ணகிரி மாவட்ட த்தில் ஒப்பந்த தொழிலாளர் மற்றும் அவுட்சோர்சிங் முறையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்று உள்ளாட்சித்துறை ஊழி யர்கள் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. ஊரக உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட முதல் மாநாடு  டி.சீனி வாசன் தலைமையில் நடை பெற்றது. ஊத்தங்கரை, நாகரசம்பட்டி, காவேரிப்  பட்டினம், கெலமங்கலம், பர்கூர், மல்லப்பாடி ஊரா ட்சி, நகராட்சி, பேரூராட்சி ஊரக உள்ளாட்சித் துறை ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் 300 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் பி.ஜி. மூர்த்தி சங்க கொடி ஏற்றினார். சிஐ டியு மாவட்டச்செயலாளர் என்.ஸ்ரீதர், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.கே.நஞ்சுண்டன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினார். தீர்மானம் 2021 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதி படி தூய்மைப் பணித் தொழி லாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், கொ ரோனா கால பணிக்கான அரசு அறிவித்த ரூ.15 ஆயி ரம் நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணி நியமன தடை சட்டத்தை திரும்ப பெற வேண்டும், வருங்கால வைப்பு நிதி தொகை பிடித்தம் விவரம் தனிநபர் கணக்கு எண், தூய்மை பணிகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிர்வாகி தேர்வு மாவட்டத் தலைவராக பி.ஜி.மூர்த்தி, செயலாளராக டி.சீனிவாசன், பொரு ளாளராக ஆர்.தங்கராஜ் தேர்வு செய்யப்பட்டனர்.