tamilnadu

img

அடிமைப்படுத்தும் சதியை முறியடிப்போம்.... 10 ஆயிரம் மையங்களில் ஆர்ப்பாட்டம்.... மே 22 அகில இந்திய எதிர்ப்பு தினத்தை வெற்றிபெறச் செய்வோம்...!

சென்னை:
மத்திய - மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத மக்கள் விரோத போக்கை கண்டித்து தேசம் தழுவிய எதிர்ப்பு நாளை, தமிழகத்தில்வெற்றிகரமாக நடத்துவது குறித்த அனைத்து தொழிற்சங்கங்களின் கலந்தாலோசனை கூட்டம் 18.5.2020 அன்று  எச். எம். எஸ் அகில இந்திய தலைவர் ராஜா ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் வே.சுப்பராமன், கே.நடராஜன் (எல்பிஎஃப்),  டி.எம் மூர்த்தி,  கே.இரவி,எம். ராதாகிருஷ்ணன் (ஏஐடியுசி)  கே.ஆறுமுகநயினார், கே.சி. கோபி குமார் (சிஐடியு)மு.சுப்பிரமணியன் (எச் எம் எஸ்),டி.வி. சேவியர் (ஐஎன்டியுசி), வி சிவகுமார்,மோகன்ராஜ் (ஏஐயுடியுசி), சோ. இரணி யப்பன், எம் திருநாவுக்கரசு (ஏஐசிசிடியு), கே
ராம்பாபு (டபிள்யூபிடியுசி), அந்திரி தாஸ், கி.வெங்கடேசன் (எம்எல்எப்) ஈ.சண்முக வேலு, ஜி.முனுசாமி (எல்டியுசி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் கள் வருமாறு:

அஞ்சலி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராகவும், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் பணிபுரிந்த தோழர்கே.வரதராஜன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலாளரும் முன்னாள் சட்ட மேலவை உறுப்பினருமான தோழர் மீனாட்சி சுந்தரம், கோவிட் 19 தொற்றுக்கு உள்ளாகி இறந்த டாக்டர் சைமன், நெய்வேலி என்எல்சி  பாய்லர் வெடிப்பில் இறந்த தொழிலாளர்கள், அவுரங்காபாத்தில் ரயில் மோதியும்,  சாலை விபத்துகளிலும், பட்டினியாலும் மேலும் பல வகைகளிலும் மரணமடைந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஹைதராபாத் வாயுக் கசிவின் காரணமாக இறந்தவர்கள் ஆகியோருக்கு கூட்டம் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியது.

துயரின் பிடியில் தொழிலாளி வர்க்கம்

எந்த முன் தயாரிப்பும் இல்லாமல் திடீரென அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால், உழைக்கும் மக்களின் வாழ்வு நிலைகுலைந்து போயிருக்கிறது. அன்றாடம் உழைத்து ஊதியம் பெற்று, அதன்மூலம் வாழ்க்கை நடத்தும் லட்சக்கணக்கான குடும்பங்கள் பட்டினியும்  பசியுமாக தவிக்கின்றன. அவசர அவசரமாக டோக்கன் அடித்துத் தந்து, சாராயம் கொடுக்கத்தயாராக இருக்கும் தமிழ்நாடு மாநில அரசு,  அரிசி, பருப்பு,  எண்ணெய், நிவாரணநிதி தருவதற்கு குடும்பஅட்டை, இதுநாள் வரைக்கும் புதுப்பித்த வாரிய அட்டை, வங்கி கணக்கு எல்லாம் கேட்டு சாமானிய மக்களை அலைய விடுகிறது.பொது முடக்க காலத்தில் அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளம் தர வேண்டும் என மத்திய மாநில அரசுகள் அறிவித்தன. ஆனால் முதலாளிகள் தரவில்லை. நீதிமன்றம் போய் தடை உத்தரவுவாங்கினார்கள். டாஸ்மாக் கடை திறக்கத் தடைவிதித்த உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை போய் வாதிட்ட மாநில அரசு, சம்பளம் தரக்கூடாது என்று சொல்லும் போது வாய் திறக்கவில்லை.வேலையும் வருமானமும் இழந்த புலம்பெயர் தொழிலாளர்களின் துயரம்சொல்லில் அடங்காது. இனியும் அரசை நம்ப முடியாது என பல நூறு கிலோ மீட்டர் தூரம் நடந்தே செல்ல புறப்பட்டுவிட்டனர். வழிநெடுக பட்டினியாலும், நோயாலும், பசியாலும், விபத்துக்களாலும் செத்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுவதற்கு பதிலாக, காவல்துறை மூர்க்கமாக  ஈவிரக்கமற்ற முறையில் தடி கொண்டு அடிக்கிறது; கைது செய்கிறது; புறப்பட்ட இடத்துக்கே போக வைக்கிறது.பெருமுதலாளிகளிடம் வேலை செய்ய, தரைமட்ட கூலிக்கு ஆள் வேண்டும் என்பதால், விலங்கினும் கீழாக மாநில அரசுகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை விரட்டிக் கொண்டிருக்கின்றன.

பாஜக அரசு கையாண்ட தாராளமய பேரழிவு கொள்கைகளால் இந்திய நாட்டுப்பொருளாதாரம் சீர்குலைந்து கிடக்கிறது. கொரோனா பேரிடரின் பெயரைச் சொல்லிக்கொண்டு, மீதம் உள்ள பொதுத்துறை களையும் மத்திய அரசு தனியாருக்கு விற்றுக் கொண்டு  இருக்கிறது. உத்தரப் பிரதேசம், குஜராத்,  மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநில அரசுகள்  தொழிலாளர் சட்டங்கள் அனைத்தையும் குறைந்தது  3  ஆண்டுகளுக்கு  தற்காலிகமாக ரத்து செய்து அவசரச் சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கின்றன. 8 மணி நேர வேலையை 12 மணி நேரவேலையாக உயர்த்துவதற்கு பன்னிரண்டு மாநில அரசுகள் முனைந்து வருகின்றன. தொழிற் சங்கம் வைக்கும் உரிமை, வேலைக்கும் சம்பளத்துக்கும் உத்திரவாதம், சமூகப் பாதுகாப்பு என நூறாண்டு காலம் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தையும் மறுத்து, தொழிலாளர், பணியாளர்களை அடிமை நிலைக்குத் தள்ளும் நடவடிக்கையே இது. மற்ற மாநில அரசுகளும் இதே நடவடிக்கையை எடுக்க வேண்டும் என மத்திய அரசாங்கம் நிர்ப்பந்தம் செய்து வருகிறது.உழைக்கும் மக்களை அடிமையாக்கும் இந்த சதிச் செயல்களை எதிர்த்து  22. 5. 2020  இல் நாடு தழுவிய கண்டன இயக்கத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள அறைகூவலை தமிழ்நாட்டு தொழிற்சங்கங்கள் வரவேற்கின்றன. 

கோரிக்கைகள் வருமாறு

1. தொழிலாளர் சட்டங்கள் மீது கை வைக்காதே! 8 மணி வேலை நேரத்தை அதிகரிக்காதே!

2. குடியரசுத் தலைவர் அவர்களே! தொழிலாளர் சட்டங்களை இடைநீக்கம் செய்யும்அவசர சட்டத்திற்கு ஒப்புதல் தராதீர்!

3. பொதுத் துறைகளை தனியார்மயப்படு த்தாதீர்! புதிய மின்சார சட்டத் திருத்த மசோதாவைக் கைவிடுக!

4. மத்திய, மாநில அரசாங்கங்களின் உத்தரவுபடி, நிரந்தர, கேஷுவல், கான்ட்ராக்ட்தொழிலாளர்கள் அனைவருக்கும் பொது முடக்க காலத்திற்கு முழுச் சம்பளம் வழங்குவதை உறுதிசெய்திடுக!

5. பணியாளர்களின் அகவிலைப்படி உயர்வுகளை நிறுத்துகிற, நிலுவை தொகைகளை மறுக்கிற நடவடிக்கையை ரத்து செய்க!

6. ஈட்டிய விடுப்பை முடக்காதீர்! ஓய்வூதி யத்தில் கை வைக்காதீர்!

7. அன்றாடம் உழைத்து, ஊதியம் ஈட்டிஅதன்மூலம் குடும்பம் நடத்தும் அனைத்துதொழிலாளர்களுக்கும் நிவாரணநிதியும் மளிகைப் பொருட்களும் தடையின்றி விரைவாக கொடுத்து முடிப்பதை உறுதிப் படுத்துக! வாரியப் பதிவை வலியுறுத்தாதீர்!

8. பொது முடக்கத்தால் வருமானம் இழந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் தலா ரூ. 7,500 வீதம் நிவாரணம் வழங்குக!

9. கட்டுமானம், ஆட்டோ மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரிய அட்டையைப் புதுப்பிக்கவில்லை என காரணம் கூறாமல், நிவாரண நிதி, பொருட்களை வழங்குக! ஓய்வூதியருக்கும் வழங்கிடுக!

10. மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டங்களை நடத்தி, நிதியும் பொருட்களும் சரியாகச் சென்று சேர்வதற்கான வழிவகைகளைத் தீர்மானித்து செயல்படுத்துக!

11. புலம்பெயர்ந்த தொழிலாளர் மீதான காவல்துறை தாக்குதல்களை நிறுத்து! தரைமட்ட கூலிக்கு வேலை செய்ய அவர்களை கொத்தடிமைகள் ஆக்காதே! அவர்கள் சொந்த ஊர் திரும்ப, ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து வசதிகளை, கட்டணம் வசூலிக்காமல் ஏற்பாடு செய்து தருக!

12. கோவிட்-19 கிருமித் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க, உயிரை பணயம் வைத்து பணி புரிந்த மருத்துவ பணியாளர்கள், உள்ளாட்சி துப்புரவு பணியாளர்கள் ஆகியோரை நிரந்தரப் படுத்துக! அரசு அறிவித்த சிறப்பு ஊதியத்தை உள்ளாட்சி துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் வழங்கிடுக!

13. பொது முடக்க காலத்தில் அரும்பணி ஆற்றிய மருத்துவப் பணியாளர்கள் மின்சாரம் வருவாய் துறை ஊழியர்கள், காவலர்கள் உள்ளிட்ட அனைவரும் பணியில் இறந்துபோக நேரிட்டால், நிரந்தரம், காண்ட்ராக்ட், கேஷுவல் என வித்தியாசப்படுத்தாமல் அனைவருக்கும் இழப்பீடு வழங்குக!

14. மருத்துவமனைகள் உள்ளாட்சி துப்புரவு பணிகளில் ஈடுபடும் நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்கு அரசு நிச்சயித்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்குக! அந்த ஊதியத்தையும் குறைக்க அரசு நியமித்துள்ள குழுக்களை உடனடியாகக் கலைத்து,இந்த பணியாளர்களுக்கு அரசு மரியாதை செய்கிறது என்பதை உறுதிப்படுத்துக!

15. ஆஷா, மதிய உணவு மற்றும் அங்கன்வாடி உள்ளிட்ட திட்ட ஊழியர்களுக்கு ‘தொழிலாளர்’ தகுதி வழங்கி, குறைந்தபட்சம் 18,000 ரூபாய் சம்பளம்வழங்குக!

10 ஆயிரம் மையங்களில்...
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சாலை கள், போக்குவரத்துக் கழக பணிமனைகள், மின்சார வாரிய அலுவலகங்கள், நிறுவன ங்கள், வருவாய் துறை, தொழிலாளர் துறை, சமூக நல வாரிய அலுவலகங்கள், வீதிமுனைகள், வீடுகள் மற்றும் அந்தந்த மாவட்டகூட்டுக்குழு பேசி நிச்சயிக்கும் பொது இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தமிழக தொழிற்சங்கங்களின் கூட்டம் முடிவு செய்கிறது.கருப்புக் கொடி பிடித்துக்கொண்டு கருப்புபட்டைகளை சட்டைகளில் அணிந்து கொண்டு, தொழிற்சங்க கொடிகளை ஒருசங்கத்துக்கு ஒரு கொடி வீதம் பிடித்துக் கொண்டு, இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும். ஆர்ப்பாட்டம் நடத்தும் இடத்தில் ஐந்து பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடித்து நிற்க வேண்டும். முகக்காப்பு அணிந்திருக்கவேண் டும். 5 க்கும் மேற்பட்ட தோழர்கள் இருந்தால்மூன்று மீட்டர் இடைவெளிவிட்டு தனிக் குழுவாக நிற்கவேண்டும். 

;