tamilnadu

img

"100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்வோம்" விழிப்புணர்வு நடைப்பயணம்

“100 விழுக்காடு வாக்களிப்பை உறுதி செய்வோம்” விழிப்புணர்வு நடைப்பயணம் சென்னை, பெசன்ட்நகர், எலியட்ஸ் கடற்கரைப் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நடைப்பயணத்தில் சென்னையிலுள்ள பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த இளைஞர் ரெட்கிராஸ் மாணவ - மாணவியர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்பேரணியானது தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் நியூஸ் 7 – தொலைக்காட்சியுடன் இணைந்து நடத்தப்பட்டது. இதனை மாநகராட்சி ஆணையாளர்  டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.