tamilnadu

img

விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் தொடக்கம்...

சென்னை:
சென்னையில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்வர் பழனிசாமி இலவச சைக்கிள் வழங்கினார். தலைமை செயலகத்தில் 9 மாணவ ,மாணவிகளுக்கு இலவச சைக்கிள் தந்து திட்டத்தை தொடங்கி வைத்தார். 2020-21 நடப்பு கல்வியாண்டில் மொத்தம் 5.45 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப் பட உள்ளது.

வழக்கமாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும். இந்த முறை கொரோனா பேரிடர் காலம் சைக்கிள் வழங்குவது தள்ளி போனது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டதுடன் கொரோனா பாதிப்பும் குறைந்துள்ளது. இதனால் சென்னை தலைமை செயலகத்தில் இலவச சைக்கிள் வழங்கப்படும் நிகழ்ச்சி வியாழனன்று (டிச.10) நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

;