tamilnadu

img

கலைஞரின் 101-ஆவது பிறந்த நாள் விழா நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

சென்னை, ஜூன் 3 - ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர்; 13 முறை சட்டமன்றத் தேர்த லில் போட்டியிட்டு அனைத்து முறையும் வெற்றி பெற்றவர்; தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினர்; தமிழ்நாட்டின் அர சியல் தலைவர் மட்டுமல்லா மல் இந்திய அரசியல்  திசையை தீர்மானிப்பவராக வும் திகழ்ந்தவர்.  

நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர்.

 அவரது 101-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மெரினா வில் உள்ள அவரது நினை விடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரி யாதை செலுத்தினார். நூற்றாண்டு நிறைவு மலர் வெளியீடு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ‘தமிழரசு’ இதழ் தயாரித்த கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, மலர் தொகுப்புகளை முத லமைச்சர் வெளியிட நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து கோடம்பாக்கத்தில் உள்ள ‘முரசொலி’ அலுவலகத்தில் ‘தமிழினத் தலைவர் கலை ஞர் நூற்றாண்டு நிறைவு மலர் - 2024’ என்ற புத்தகத்தை முதல் வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

 ‘முரசொலி’ செல்வம் பெற்றுக்கொண்டார். முன்னதாக, சென்னை கோபாலபுரம் இல்லத்தில், கரு ணாநிதி படத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.  தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வுகளில் கனி மொழி எம்.பி., அமைச்சர்கள் உதயநிதி, க. பொன்முடி, ஐ. பெரியசாமி, கே.என். நேரு, எ.வ. வேலு, பி.கே. சேகர்பாபு, மா. சுப்பிரமணியன், சி.வி. கணேசன், திமுக எம்.பி. க்கள் ஆ. ராசா, தயாநிதி மாறன், அமைப்புச் செய லாளர் ஆர்.எஸ். பாரதி, மேயர் ஆர். பிரியா உள்ளிட்ட ஏராள மானோர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

புகைப்படக் கண்காட்சி செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் “கலைஞர் நூற் றாண்டு நிறைவு நினை வலைகள்” சிறப்பு புகைப் படக் கண்காட்சி மற்றும் கலை ஞரின் வாழ்க்கை வரலாறு, அர சியல் பயணம், செயல் படுத்திய அரசுத் திட்டங்கள் குறித்த குறும்படக் கண்காட்சி யையும் முதலமைச்சர் பார்வையிட்டார்.

நீங்கள் அமைத்த பாதையில்  பயணத்தை தொடர்கிறோம்!

கலைஞர் பிறந்த நாளில் முதல்வர் ஸ்டாலின் வீடியோ

சென்னை, ஜூன் 3 - தமிழ்நாட்டின் முன்னாள் முத லமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 101-ஆவது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“மேதை என்பார், நடிகர் என்பார், நாடக வேந்தர் என்பார், சொல்லாற்றல் சுவைமிக்க எழுத்தாற்றல் பெற்றார் என்பார், மனிதர் என்பார், மாணிக்கம் என்பார்,  மாநிலத்து அமைச்சர் என்பார், அன்னை என்பார், அருமொழிக் காவலர் என்பார், அரசியல்வாதி என்பார்.

அத்தனையும் தனித்தனியே சொல்வதற்கு நேரமற்றோர் நெஞ்சத்து அன்பாலே ‘அண்ணா’ என்று ஒரு சொல்லால் அழைக்கட்டும் என்றே அவர் அன்னை பெயரும் தந்தார் என்று முத்தமிழ் அறிஞர் கலைஞரால் போற்றப்பட்ட பேரறிஞர் பெருந்தகைக்கு முதல் வணக்கம்.

தலைவர்களுக்கெல்லாம் தலை வர், முதல்வருக்கெல்லாம் முதல்வர், கலைஞர்களுக்கெல்லாம் கலை ஞர், நவீன தமிழ்நாட்டைச் செதுக்கிய சிற்பி, இந்த பூமிப்பந்தில் வாழும் தமி ழருக்கெல்லாம் குடும்பத் தலைவர்.

இந்திய நாடே அண்ணாந்து பார்த்த அரசியல் ஞானி. முத்தமிழ் அறிஞர், தமிழினத் தலைவர் கலை ஞர் அவர்கள் சூல் கொண்ட நாள்  ஜூன் 3. அதிலும், 2024-ஆம் ஆண்டு என்பது இந்த நூற்றாண்டின்  தலைவராம் கலைஞருக்கு நூற்றாண்டு!

எல்லா ஆண்டும் கலைஞர் ஆண்டே! அவர் ஆண்ட ஆண்டும் வாழ்ந்த ஆண்டும் மட்டுமல்ல எல்லா ஆண்டும் கலைஞர் ஆண்டே! வீழ்ந்து கிடந்த தமிழ் சமுதாயத்திற்கு விடிவெள்ளியாய் தோன்றி வாழும் காலத்தில் ஒளி தரும் உதயசூரிய னாய் வாழ்ந்து மறைந்த பிறகும் கலங்கரை விளக்கமாய் வழிகாட்டி கொண்டிருப்பவர் தான் தலைவர் கலைஞர் அவர்கள். தலைவர் அவர்களே நீங்கள் நினைத்தீர்கள். நாங்கள் செய்து காட்டி வருகிறோம். நீங்கள் பாதை  அமைத்தீர்கள், நாங்கள் பயணத்தை தொடர்கிறோம்.

நீங்கள் இயக்குகிறீர்கள் நாங்கள் நடக்கிறோம்; உங்கள் பெய ரை காக்கவே எந்நாளும் உழைக் கிறோம். உழைப்போம்... உழைப் போம்... உழைப்போம்...!” என்று  தெரி வித்துள்ளார்.

;