சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி இன்றுடன் (12.09.22) ஓய்வு பெறுகிறார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி (62), இன்றுடன் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். இதற்கிடையில், கடத்தல், அன்னிய செலாவணி மோசடி, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளை விசாரிக்கும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (SAFEMA) தலைவராக நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரியை மத்திய அரசு நியமித்துள்ளது. அதன்படி, சில நாட்களில் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (SAFEMA) தலைவராக அவர் பதவியேற்கவுள்ளார்.
இந்த நிலையில், மூத்த நீதிபதி எம்.துரைசாமி நாளை (13-09-2022) முதல் பொறுப்புத் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கிறார். மேலும், நீதிபதி துரைசாமி, செப்டம்பர் 21ஆம் தேதியுடன் பணி ஓய்வுபெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.