சென்னை,டிச.21- ஆள்மாறாட்டம் செய்து 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய வழக்கில் புதுச்சேரி பாஜக எம்.எல்.ஏ. கல்யாண சுந்தரத்தை விடுதலை செய்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்தி ரன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு என்.ஆர்.காங்கிரஸ் அரசில் போக்கு வரத்து அமைச்சராக இருந்த கல்யாண சுந்தரம், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியபோது ஆள்மாறா ட்டம் செய்ததாக புகார் எழுந்தது.
இந்த வழக்கில் அவருக்கு விசாரணை நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கியதால் அமைச்சர் பதவியை இழந்தார். விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்ததில் அவர் விடுதலையானார்.
இந்த விடுதலையை எதிர்த்து காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறை யீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் வியாழக்கிழமை (டிச.21) தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்தி ரன், பாஜக சட்டமன்ற உறுப்பினர் விடுதலை செல்லும் என்று தீர்ப்ப ளித்துள்ளார்.