மலைவாழ் மக்கள் சங்கத்தின் போராட்டத்தால் நல வாரிய அட்டை பெற்ற இருளர் பழங்குடியினர்
வேலூர், ஜூலை 1 - வேலூர் மாவட்டம். காட்பாடி வட்டம் மகிமண்டலம் ஊராட்சி புதூர் பகுதியில் சுமார் 18க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் இனச்சான்று, நலவாரிய அட்டை கோரி விண்ணப்பம் செய்ததோடு, அரசுக்கு தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் வேலூர் மாவட்டக் குழு சார்பில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நல அலுவலருக்கு கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டது. இதன் விளை வாக மகிமண்டலம் பகுதியைச் சேர்ந்த 18 பேருக்கு அரசு நலவாரிய அட்டையை வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நல அலுவலர் ஆர்.என்.எஸ்.மது செழியன் அம்மக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் சி.எஸ்.மகாலிங்கம், மாவட்ட தலைவர் பி.நதியா, மகிமண்டலம் கிளைச் செய லாளர் கே.சந்தனவேல், விஜயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் அப்பகுதி மக்களுக்கு இனச் சான்று வழங்குவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.வீட்டுமனை பட்டா மற்றும் அரசு சார்பில் தொகுப்பு வீடு கட்டிதர நட வடிக்கை எடுக்க வேண்டும். அம்மக்களின் வாழ்வாதாரத்துக்கு ஆடு, மாடு போன்ற வற்றை வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.