tamilnadu

கே.பாலகிருஷ்ணன் பேட்டி...  1ஆம் பக்கத்தொடர்ச்சி

அரங்க கூட்டம் நடத்தவே அரசு அனுமதி மறுக்கிறது. மதச்சார்பற்ற கூட்டணி கட்சித் தலைவர்கள் அறிவாலயத்தில் கூட்டம் நடத்த கூட தமிழகஅரசு அனுமதிக்கவில்லை. பாஜக தடையை மீறி அடுத்த மாதம் 6 ஆம்தேதிவரை வேல் யாத்திரை நடக்கும் என்று அறிவித்துள்ளார்கள். மதப்பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும்என்ற நோக்கத்தை பாஜக கைவிடவில்லை. எனவே தமிழக அரசு உரிய முறையில் கண்காணித்து தொடர்ந்து தடுத்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது” என்றார்.

காவல்துறையினர் மீது நடவடிக்கை
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், “தூத்துக்குடியில் தந்தை மகன் இருவர் காவல்நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கு உலகளாவிய பிரச்சனையாக மாறியது. இப்படிப்பட்டநிலையில் பண்ருட்டி அருகே, காடாம்
புலியூரை சேர்ந்த முந்திரி வியாபாரிசெல்வமுருகன் என்பரைஅழைத்துசென்ற காவல்நிலையத்தில் சித்ரவதைசெய்து, லாட்ஜூக்கு கொண்டு சென்றுஅடித்து, நீதிமன்றத்தில் ரிமாண்ட்செய்த பிறகு3வது நாளில் சிறையில்இறந்துபோகிறார். காவல்துறையைஎதிர்த்து மக்கள் போராடினாலும் சிலஅதிகாரிகள் திருந்தவே மாட்டார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த காவல்நிலைய படுகொலை நடந்துள்ளது.சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை தரவேண்டும். காவல்துறை அதிகாரிகளுக்கு மனித உரிமை குறித்த அடிப்படையான புரிதலை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.மூன்றாவது அணி குறித்த கேள்விக்கு பதிலளித்த கே.பாலகிருஷ்ணன், “தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டி போடலாம். அணி என்பதை பொறுத்தவரை பாஜக மற்றும் அதிமுகவை எதிர்த்து மதச்சார்பற்ற சக்திகள் ஒன்று சேர்ந்து அணி அமைத்துள்ளோம். கேடு கெட்ட ஆட்சி நடத்தி வரும் அதிமுகவையும் தமிழகத்தை சிதைக்க முயலும் பாஜகவையும் ஒரு சேர வீழ்த்துவதே இந்த அணியின் இலக்கு ”  என்றார்.இந்நிகழ்வின்போது மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ்,மாநிலக்குழு உறுப்பினர்கள் க.உதயகுமார், வெ.ராஜசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.