மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனை, தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் எம்.ஜெயபால், ஜே.ஜேம்ஸ் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். அப்போது, மின் கட்டணங்கள் தொடர்பாக தங்களது கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உதவிட கோரிக்கை வைத்தனர். இந்த சந்திப்பின் போது கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.