tamilnadu

img

கடலூர் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு ஏற்படுத்துக சிஐடியு மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

கடலூர் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு ஏற்படுத்துக  சிஐடியு மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

கடலூர், செப்.17- கடலூர் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி வேலை வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்று நெய்வேலி யில் நடைபெற்ற சிஐடியு மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. இந்திய தொழிற்சங்க மையம் கடலூர் மாவட்ட 14 ஆவது மாநாடு நெய்வேலியில் செப்டம்பர் 16, 17 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. இம் மாநாட்டை முன்னிட்டு புதுக் குப்பம் ரவுண்டானாவில் இருந்து பிரதிநிதிகள் பேரணி நடைபெற்றது.  இதனைத் தொடர்ந்து, மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் பி.கருப்பையன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலை வர் எ.வேல்முருகன் கொடி யேற்றி வைத்தார். மாநிலக் குழு உறுப்பினர் என்.ஆர்.ஆர். ஜீவானந்தம் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். மாவட்ட துணைத்தலைவர் எஸ்.திரு அரசு வரவேற்றார். மாநிலத் துணைத் தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்டச் செய லாளர் டி.பழனிவேல் ஸ்தாபன வேலை அறிக்கை யினையும் பொருளாளர் எம். சீனிவாசன் வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் ஆர். கே.சரவணன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ். பிரகாஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில துணைத் தலைவர் எஸ்.கே மகேந்திரன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். மாவட்ட இணை செய லாளர் டி. ஜெயராமன் நன்றி கூறினார். நிர்வாகிகள் தேர்வு மாவட்டத் தலைவராக பி. கருப்பையன், செய லாளராக டி. பழனிவேல், பொருளாளராக எம். சீனி வாசன் உள்ளிட்ட 23 பேர் கொண்ட நிர்வாகிகளும், 66 பேர் கொண்ட மாவட்ட குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானம் கடலூர் மாவட்டத்தில் 2.77 லட்சம் இளைஞர்கள் படித்துவிட்டு வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கும் நிலையில், மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். என்எல்சி நிறுவனத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பத்தா யிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். எனவே என்எல்சி நிறுவனத்தில் அவுட் சோர்சிங் முறையை கைவிட்டு, ஒப்பந்த தொழி லாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். என்எல்சி நிறுவனத்திற்கு நிலம், வீடு மனை கொடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு இழப்பீடு நிவாரணம், நிரந்தர வேலை வழங்க வேண்டும். கடலூர் மாவட்ட த்தில் பாரம்பரியமான  கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரிபேட் தொகையை ஒன்றிய அரசு வழங்கவேண்டும், மீன் பிடிகால தடைக்கால உதவி தொகையை ரூ.18,300 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். கட்டுமான தொழிலையும், கட்டுமான தொழிலாளர்க ளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். சமவேளைக்கு சம ஊதியம் அளித்திட வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.