tamilnadu

img

வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் - இந்திய வானிலை ஆய்வு மையம்


தென்கிழக்கு வங்கக்கடலில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:-
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது. புயல் சின்னம் திரிகோணமலையில் இருந்து 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது இது அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னமாக மாறி இலங்கையில் நாளை மாலை அல்லது இரவில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
இந்த புயலுக்கு மாலத்தீவு வழங்கிய புரெவி என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.