புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தலைநகர் தில்லியில் விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு நாடு முழுவதும் ஆதரவு இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் கார்ப்பரேட் நிறுவனங்களின் பொருட்களை நிராகரிக்க கோரி விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தை திரைப்பட ஸ்டண்ட் இயக்குனரும் கலைமாமணியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழருமான ஜுடோ.கே.கே.ரத்திணம் துவக்கி வைத்தார். கே.சாமிநாதன். பி.குணசேகரன், சி.சரவணன். எஸ்.சிலம்பரசன், எஸ்.கோட்டிஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.