tamilnadu

img

தமிழகத்தில் நவம்பர் 25 ஆம் தேதி தீவிர கனமழை - வானிலை ஆய்வு மையம் 

நவம்பர் 25 ஆம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. சென்னையிலும் பல்வேறு கடலோர மாவட்டங்களில் தீவிரமாக கனமழை பெய்து வந்தது. சென்னையில் இருக்கும் ஏரிகள் இதனால் வேகமாக நிரம்பியது. சென்னையில் இருக்கும் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மழை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பெரிய அளவில் மழை இல்லை. பல இடங்களில் வெயில் அடித்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்கள் தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மழை அதிகரிக்கும், பின் மழை தீவிரம் எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 ஆம் தேதி தமிழகத்தில் நல்ல மழை பெய்யும். நவம்பர் 25 ஆம் தேதி தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். ஒரு சில இடங்களில் அதீத கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு நவம்பர் 25 ஆம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரிக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இதனால் தீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்களிலும், சென்னையிலும் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. எங்கெல்லாம் மழை பெய்யும் என்ற விவரம் வரும் நாட்களில் வெளியிடப்படும். இந்திய பெருங்கடல், வங்கக்கடலில் 50 கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.

;