சென்னை, ஜூன் 8- ரூ. 930 கோடி மோசடியில் ஈடுபட்ட தாக பாசி நிதி நிறுவனத்துக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி பிரமோத்குமாரை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து ரூ. 930 கோடி முதலீடுகளை பெற்று மோசடி செய்ததாக திருப்பூர் பாசி நிதி நிறுவ னத்துக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய நிதி நிறுவன இயக்கு நரான கமலவள்ளி திடீரென மாயமா னார்.
பின்னர் சில நாட்களில் திரும்பி வந்த கமலவள்ளி, மோசடி வழக்கில் இருந்து விடுவிப்பதாக கூறி தன்னிடம் ரூ. 3 கோடி வரை லஞ்சம் பெற்றதாக ஆனைமலை காவல் நிலையத்தின் அப் போதைய ஆய்வாளர் மோகன்ராஜ், திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு அப்போ தைய ஆய்வாளர் சண்முகையா ஆகி யோருக்கு எதிராக புகார் தெரிவித்தி ருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், அப்போது மேற்கு மண்டல ஐஜியாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் மற்றும் போலீசாருக்கு எதிராக வும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ-க்கு மாற்றப் பட்ட இந்த வழக்கில், கோவையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி பிரமோத்குமார் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளு படி செய்த கோவை சிபிஐ சிறப்பு நீதி மன்றம், அவருக்கு எதிராக குற்றச் சாட்டுகளை பதிவு செய்தது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமோத் குமார் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விவேக்குமார் சிங், ‘‘மனுதாரர் லஞ்சம் பெற்றார் என்பதை தகுந்த ஆவணங்களுடன் நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டது. அவர் சார்பாக மற்றவர்கள் வாங்கினார்கள் என குற்றம் சாட்டியிருப்பது வெறும் ஊகத் தின் அடிப்படையிலானது. எனவே, இந்த வழக்கில் இருந்து ஐபிஎஸ் அதி காரி பிரமோத் குமாரை விடுவிக்க மறுத்தும், குற்றச்சாட்டுகளை பதிவு செய்தும் கோவை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படு கிறது’’ எனக் கூறி வழக்கில் இருந்து ஐபிஎஸ் அதிகாரி பிரமோத்குமாரை விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.