ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்ட செய்தி கவலையளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்ட செய்தி கவலையளிக்கிறது.
இதுதொடர்பாக அரசு விசாரணைக் குழு அமைத்துள்ளது அவசியம். எதிர்காலத்தில் இவ்வாறு நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்.
கை இழந்துள்ள குழந்தையின் எதிர்கால மருத்துவ தேவைகளையும், கல்வி உள்ளிட்ட உதவிகளையும் அரசு உறுதி செய்திடவும், உரிய நிவாரணம் வழங்கிடவும் கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.