tamilnadu

img

கொரோனா தடுப்பு, நிவாரணப் பணிகளில் அரசு அலட்சியம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

சென்னை, மே 23 - கொரோனா தொற்றை அலட்சிய மாக கையாளும் தமிழக அரசை கண்டித்து சனிக்கிழமையன்று (மே 23)  சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு நடத்திய இந்தப்போராட்டத்தில் ஏராள மானோர் கலந்து கொண்டனர். கொரோனா தொற்றை எதிர்கொள்ள மாநிலத்திற்கு தர வேண்டிய நிதியை கொடுக்க வேண்டும்,  மாநில அரசு அனைத்துக் கட்சி ஆலோ சனைகளை கேட்க வேண்டும், சென்னை யில் கொரோனா சோதனையை அதிகப்படுத்த வேண்டும், மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்களுக்கு 2017ம் ஆண்டு பிறப்பித்த அரசாணைப்படி தினக்கூலியை வழங்க வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம்  முககசவம், கிருமிநாசினி (சானிடை சர்), சத்து மாத்திரைகளை வழங்க வேண்டும், மருத்துவப் பணியாளர்கள், துப்பு ரவு தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், பொது இடங்களில் கை கழுவ சோப்பு, சானிடைசர் வசதி களை ஏற்படுத்த வேண்டும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஆங்காங்கே தங்கும் இடம் அமைக்க வேண்டும்; கூடுதல் ரயில்களை இயக்கி அவரவர் மாநிலத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும், பள்ளி, ஊடகம் போன்ற தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பள மறுப்பு, சம்பள வெட்டு, பணி நீக்கம் போன்றவற்றை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பிடித்தபடி போராட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கமிட்டனர்.

கொரோனா தொற்று அதிகம் உள்ள  வட்டங்களில் நடமாடும் பரிசோ தனை மையங்கள் மூலம் சோதனை களை அதிகப்படுத்த வேண்டும், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதி களில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற வேண்டும், நலவாரிய உறுப்பி னர்களுக்கு அறிவித்த நிவாரணத்தை விரைந்து வழங்க வேண்டும், நடை பாதை வியாபாரிகளை வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும், மாநக ராட்சியால் அண்மையில் தேர்வு செய்யப்பட்ட தற்காலிக ஒப்பந்த ஊழி யர்களாக தேர்வு செய்யப்பட்டு பணி யாற்றும் தொழிலாளர்களுக்கு விரைந்து சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை கள் போராட்டத்தில் வலி யுறுத்தப்பட்டது.

எக்ஸ்ரே-வுக்கு கட்டணமா?
இந்தப் போராட்டத்திற்கு இடையே  செய்தியாளர்களிடம் பேசிய மாநில  செயற்குழு உறுப்பினர்  கே.கனகராஜ், மத்திய சென்னைக்குட் பட்ட ராயபுரம், கோடம்பாக்கம், திரு. வி.க.நகர் மண்டலங்களில்தான் கொரோனா தொற்றால் அதிகம் பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மண்ட லங்களில் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பரிசோதனை செய்வதாக கூறிவிட்டு, எக்ஸ்ரே-வுக்கு 50 ரூபாய் வசூலிப்பதை கைவிட வேண்டும் என்றார். இரண்டு மாத ஊரடங்கால் ஏழை  எளிய உழைப்பாளி மக்களின் வாழ்வா தாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு குடும்பத்திற்கும் 7 ஆயிரத்து 500 ரூபாய் வீதம்  3 மாதத்திற்கு வழங்க வேண்டும் என்று  கோரிய அவர், புலம்பெயர்ந்த தொழி லாளர்களை அவரவர் மாநிலத்திற்கு கொண்டு செல்ல போதுமான அளவு ரயில்களை மத்திய அரசு இயக்காமல் உள்ளது.

உணவு, தங்குமிடம் உள்ளிட்ட  வசதிகள் இல்லாததால் நடந்து செல்லும் வழியில் செத்துக் கொண்டே இருக்கிறார்கள். மாநில அரசுகளும் எதுவும் செய்ய தயாராக இல்லை என்று வேதனை தெரிவித்தார். முகக்கவசம் அணியவில்லை என்றால் 500 ரூபாய் அபராதம் விதிக்கி றார்கள். அதைவாங்க கூட பணம் இல்லாமல் வருகிறவர்களிடம் அபரா தம் விதிப்பது நியாயமா? முக கவசத்தை ரேசன் கடை மூலம் இலவச மாக கொடுக்க முடியாதா? என்றும் கேள்வி எழுப்பினார். இதன்பிறகு தலைமையிட வட்டாட்சியர் சேகரை சந்தித்து தலை வர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். இந்தப் போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் ஆர். முரளி, சி. திரு வேட்டை, எஸ்.கே. முருகேஷ், இ. சர்வேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.