tamilnadu

img

திருவண்ணாமலையில் மகளிர் அரசு கலைக் கல்லூரி

திருவண்ணாமலையில்  மகளிர் அரசு கலைக் கல்லூரி

திருவண்ணாமலை, ஜூலை 19- திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண்கள் அரசு கலைக் கல்லூரி துவக்க வேண்டும் என்றும் இந்திய மாணவர் சங்கம்  கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய மாணவர் சங்கத்தின் திருவண் ணாமலை மாவட்ட 9ஆவது மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் இரா. விக்னேஷ் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் சுஜய் வரவேற்றார். மாநாட்டைத் துவக்கி வைத்து மாநில துணைத் தலைவர் பா. ஆனந்த் உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கோபிநாத் வேலை அறிக்கை வாசித்தார். மாநில துணைத் தலைவர் மு. தமிழ் பாரதி நிறைவுரையாற்றினார்.  முன்னாள் மாவட்ட செயலாளர்  ஏ.லட்சுமணன், வாலிபர் சங்க மாவட்ட  செயலாளர் சி.எம். பிரகாஷ், வழக்கறி ஞர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். அபிரா மன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  மாணவர் சங்க நிர்வாகிகள் ஏ.மனோஜ்  குமார், கு. இமையவர்மன், ம. சாரதி,  கு. அரவிந்த், பா.ஹரிஹரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மு.கோடீஸ்வரி நன்றி கூறினார்.  நிர்வாகிகள் தேர்வு தலைவராக இரா.விக்னேஷ், மாவட்டச் செயலாளராக வெ.கோபிநாத் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.  தீர்மானம் திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் உருவாக்க வேண்டும், பள்ளி கல்லூரிகளில் உள்ள காலிப் பணி யிடங்களை நிரப்ப வேண்டும், பள்ளி கல்லூரி  நேரங்களில் கூடுதலாக அரசு பேருந்து இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  முன்னதாக சுதந்திரத் தின பொன்விழா நினைவுத் தூண் அருகில் இருந்து நடை பெற்ற பேரணியைக் காப்பீட்டுக் கழக அரங்க நிர்வாகி ப. முத்துக்குமார் துவக்கி வைத்தார்.