சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சியில் ஜனவரி 19 முதல் 31 வரை ‘கேலோ இந்தியா’ போட்டிகள் நடைபெறுகின்றன. இதன் நிறைவு விழா சென்னையில் நடைபெறவுள்ள நிலையில், அதில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அழைப்பு விடுத்தார். பிரதமர் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.