tamilnadu

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து

https://www.facebook.com/ComradeSRY/ 
https://twitter.com/SitaramYechury

மோடி அரசாங்கம் தனது கூட்டுக்  களவாணிகளுக்கு பகற் கொள்ளை அடிக்க கதவுகளை அகல திறந்து அனுமதி அளிக் கிறது. ஏற்கெனவே 2014ம் ஆண்டிலிருந்து ரூ8,77,755 கோடி கடன் தள்ளுபடி. இன் னும் 8,34,902 கோடி வாராக் கடனாக உள்ளது. இப்பொழுது இந்த பகற்கொள்ளையை சட்டப்பூர்வமாக்க  ‘bad bank’ எனப்படும் வங்கி உருவாக்கப் படுகிறது. ஆக மொத்தம் மோடி ஆட்சியில் ரூ 17 லட்சம் கோடி கார்ப்பரேட்டுகளால் பகற்கொள்ளை!

மோடி அரசாங்கம் குஜராத் அரசா ங்கத்துக்கு 2019-20 ம் ஆண்டு  ரூ.11,659 கோடி நிதி நேரடியாக தந்துள்ளது. 2015-16ம் ஆண்டுடன் ஒப்பிடும்பொழுது இது 350% உயர்வு. பல தனி யார் அமைப்புகளுக்கும் நிதி மடைமாற்றப்பட்டுள்ளது என  தணிக்கை ஆணையம் அம்பலப்படுத்தி உள்ளது.

எதிர்கட்சிகள் ஆளும் மாநி லங்களுக்கு சட்டப்படி தர வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீடு மற்றும் இயற்கை பேரிடர் நிவா ரணங்களை மறுப்பது; பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அள்ளி கொடுப்பது. இதுதான் மோடி அரசாங்கத்தின் கூட்டாட்சி ஸ்டைல். 

காந்திஜியை  மோடி வெளிநாட்டுப் பய ணங்களில் வானளாவப் புகழ் கிறார். உள்நாட்டில் கோட்சே யை புகழ்ந்து தள்ளுகிறார். சூழ்ச்சியும் வஞ்சகமும் இணைந்த இரட்டை வேடம்.