சென்னை, பிப். 5- சென்னையைச் சேர்ந்த ஒன்றாம் வகுப்பு மாணவர் ஒரு நிமிட சவால் போட்டி யில் ஆசிய சாதனை புத்த கத்திலும் இந்திய சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார். சென்னை நந்தனம் சிஐடி நகரில் உள்ள ஆல்பா சிபிஎஸ்இ பள்ளியில் படிக் கும் எஸ்.அனீஷ் பெரும்பா லான கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை ஒரு நிமிடத்திற்குள் தெரிவிக்கிறார். வீரர்களின் புகைப் படத்தை காண்பித்தால் அவர்கள் பெயர் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் கள் என்பதை உடனுக்குடன் சொல்கிறார்.ஒரு நிமிடத்தில் 53 கிரிக்கெட் வீரர்களின் நாட் டையும் அவர்களது பெயர் களையும் அனிஷ் தெரிவித்து ஆச்சரியப்படுத்தினார். இந்திய சாதனை புத்த கத்தில் இடம் பெற ஒரு நிமி டத்தில் 35 கிரிக்கெட் வீரர் களின் பெயரும் ஆசிய அள வில் சாதனை புத்தகத்தில் இடபெற 38 வீரர்களின் பெய ரும் தெரிவிக்கவேண்டும். ஆனால் அதை விட கூடுத லான வீரர்களின் பெயர்களை அனிஷ் தெரிவித்துள்ளார். அனிஷ் சாதனையை பள்ளியின் முதல்வர் ரீனா ஆல்பிரைடு பாராட்டியுள் ளார். ஆசிய சாதனை புத்த கத்தில் அனிஷ் இடம் பெற் றது பெருமை அளிப்பதாக அவருக்கு பயிற்சி அளித்த எச்.ஷாரீபா கூறினார்.