tamilnadu

img

விவசாயிகள் சங்கம், சிபிஎம் தலைமையில் பழங்குடியினர் போராட்டம்

பழங்குடியினர் குடிசைகளை அகற்ற எதிர்ப்பு விவசாயிகள் சங்கம் காத்திருப்பு போராட்டம்

கிருஷ்ணகிரி, ஜூலை 1 -  தருமபுரி மாவட்டம், பாலக்கோடு முதல் பெங்களூரு வரை ராயக் கோட்டை, ஓசூர் வழியாக புதிய நான்கு வழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது.   கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த சாலை அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகின்றது. இந்த பணிகள் நடைபெறும் தேன்கனிக்கோட்டை வட்டம், ஊடேதுர்கம் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளிச்சந்தை கிராமம் அரு கில் சந்தை மேட்டில் 50க்கும் மேற்பட்ட பழங்குடியினர் குடும்பங்கள் 25 ஆண்டுகளுக்கு மேலாக குடிசைகள் கட்டி வசித்து வருகின்றனர். இங்குள்ள 26பழங்குடி குடும்பங்களுக்கு 2003  ஆம் ஆண்டில் பாறைகள் நிறைந்த பகுதியில் இலவச வீட்டு மனை பட்டாக் களை தமிழக அரசு வழங்கியது. அரசு அந்த நிலத்தை சமன்படுத்தி வழங்கா ததாலும், பழங்குடி மக்களுக்கு நிலத்தை சமன்படுத்த பொருளாதார வசதி இல்லாததாலும் அவர்கள் தொடர்ந்து சந்தை மேட்டிலேயே குடி யிருந்து வந்தனர். வெளியேற்றும் நடவடிக்கை கடந்த மூன்று மாதங்களாக சாலை விரிவாக்கம் என்று கூறி பழங்குடி மக்களை அவர்கள் குடியிருக்கும் பகுதியில் இருந்து வெளியேற்ற வீடு களின் கதவுகளில் நோட்டீஸ் ஒட்டப் பட்டன. வருவாய்த்துறை, காவல் துறை, நெடுஞ்சாலை துறையினர், பணி எடுத்துள்ள ஒப்பந்ததாரர்களும் மக்களை வெளியேறுமாறு மிரட்டி யுள்ளனர். பத்துக்கும் மேற்பட்ட வீடு கள் இடிக்கப்பட்டுள்ளன. அதிகாரிகளின் மீறல் பழங்குடி மக்களை வெளியேற்றக் கூடாது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி குடியிருப்புகளை பாதுகாத்து வருகின்றனர். ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த போராட்டத்தின் போது இந்த மக்களுக்கு குடியிருப்புக்கு உறுதி செய்த பிறகு இங்குள்ள வீடுகள் அகற்றப்படும் என அரசின் அனைத்து துறை அதிகாரிகளும் உறுதியளித்து சென்றனர். ஆனால் கடந்த ஐந்து நாட்களாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கி, நேரடி யாக மிரட்டி, மக்களை வீடுகளை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வரு கின்றனர். அதன் உச்சமாக ஜூலை  1 ஆம் தேதி காலையில் வீடுகளை அகற்றுவதற்கு அனைத்து வாகனங் களோடும் மக்கள் குடியிருப்புக்குச் வரு வதாக முந்தைய நாள் மாலை அறி வித்து சென்றுள்ளனர். காத்திருப்பு போராட்டம் இந்த தகவல் அறிந்து அப்பகு திக்கு சென்று ஆய்வு செய்த தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தினர் உடனடி யாக தேன்கனிக்கோட்டை வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு சந்தை மேடு பழங்குடி மக்களோடு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயி கள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் டி.ராஜா, மாவட்டத் தலைவர் முருகே சன், மாவட்டச் செயலாளர் பிரகாஷ், மாநிலச் செயலாளர் பி.பெருமாள் ஆகி யோர் தலைமை தாங்கினர். இப்போரா ட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சேகர், மாவட்டக் குழு உறுப்பினர் இருதயராஜ், அனுமப்பா, தேன்கனிக்கோட்டை வட்ட மூத்த தலை வர்கள் பி.நாகராஜ் ரெட்டி, டி.எஸ். பாண்டியன், நிர்வாகிகள் தூர்வாசன், குண்டப்பா, கணேசன் உள்ளிட்டவர் கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின் போது, சந்தை மேடு பழங்குடி மக்களுக்கு தகுதியான இடத்தில் மீண்டும் வீட்டு மனை பட்டா க்கள் வழங்கி, அதில் வீடுகள் கட்டி குடி அமர்த்திய பிறகே இப்போது உள்ள  குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மீறி அகற்றும் பணியில் ஈடுபட்டால் பட்டிய லின பழங்குடி மக்கள் குடியிருப்பு களுக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது வன்கொடுமை வழக்குகள் தொட ரப்படும் என்றும் எச்சரிக்கை விடுக் கப்பட்டது. இன்று அமைதி பேச்சுவார்த்தை வட்டார வருவாய் அலுவலர், வட்டா ட்சியர், நெடுஞ்சாலை துறை அலு வலர்கள், காவல் துறையினர் விவசாயி கள் சங்கத் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, புதன் கிழமை (ஜூலை 2)  காலை 11 மணிக்கு மாவட்ட, வட்ட நிர்வாக அதிகாரிகள், விவசாயிகள் சங்கத் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் அமைதிப் பேச்சுவார்த்தை தேன்கனிக்கோட்டை யில் நடத்துவது என்று முடிவெடுக்கப் பட்டது. மேலும், சந்தை மேட்டில் குடியிருக் கும் பழங்குடி மக்களின் இருப்பிடத் திற்கு உறுதி செய்த பிறகு அப்பகுதி அகற்றுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, தற்கா லிகமாக காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.