திங்கள், ஜனவரி 18, 2021

tamilnadu

போலி நீட் சான்று விவகாரம்: தந்தை, மகளை கைது செய்ய முடிவு....

சென்னை:
நீட் தேர்வில் 27 மதிப்பெண் மட்டுமே பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தீக்ஷா என்னும் மாணவி 610 மதிப்பெண்கள் பெற்ற ஹிரித்திகா என்னும் மாணவியின் மதிப்பெண் சான்றிதழைச் சமர்ப்பித்து மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநர் செல்வராஜன் சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின்பேரில் மருத்துவக் கலந்தாய்வில் போலி சான்றிதழ் சமர்ப்பித்த மாணவி தீக்ஷா, அவரது தந்தை மருத்துவர் பாலச்சந்திரன் ஆகியோர் மீது ஆறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டது. இதனையடுத்து டிசம்பர் 15ஆம் தேதி காவல் நிலையத்தில் ஆஜராகி விசாரணைக்குள்பட வேண்டுமென இருவருக்கும் காவல்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது. ஆனால், இருவரும் விசாரணைக்கு காவல் நிலையத்தில் இதுவரை ஆஜராகா வில்லை.மேலும் ஆஜராகுவது குறித்து எந்தவிதத் தகவலையும் தெரிவிக்கவில்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப் படுகிறது.

இந்நிலையில் வெள்ளியன்று (டிச.18) மாணவி தீக்ஷா, அவரது தந்தை பாலச்சந்திரன் ஆகியோர் பெரியமேடு காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டுமென கூறி காவல் துறை சார்பில் இரண்டாவது அழைப் பாணை அனுப்பியது.இரண்டாவது அழைப்பாணை அடிப் படையில் மாணவி தீக் ஷா, அவரது தந்தை பாலச்சந்திரன் ஆகியோர் பெரியமேடு காவல் நிலையத்தில் (டிச.18) ஆஜராகத் தவறினால் அவர்களைப் பிடிக்கத் தனிப்படை காவல் துறையினர் தயாராக இருப்பதாக காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.ஒரு வழக்கினைப் பொறுத்தவரையில் குற்றவாளி காவல் நிலையத்தில் ஆஜராக மூன்று அழைப்பாணைகள் வரை கால அவகாசம் அளிக்கப்படும் என்றும், மூன்று முறை அனுப்பிய நிலையில் வழக்கில் தொடர் புடைய நபர் காவல் நிலையத்தில் ஆஜராக வில்லை என்றால் அவரைப் பிடிப்பதற்கான பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்க கப்ட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

;