tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சவுக்கு சங்கருக்கு  காவல் நீட்டிப்பு!
கோயம்புத்தூர், மே 14 - பெண் காவலர்களை இழிவாக பேசியது தொடர் பாக கைது செய்யப்பட்ட வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டி ருந்தார். 

அவரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து  விசாரித்து வந்த போலீசார், போலீஸ் காவல் முடி வடைந்த நிலையில் செவ்வா யன்று சவுக்கு சங்கரை, கோவை 4-ஆவது குற்ற வியல் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு முன்னிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி னர். அப்போது மே 28 வரை அவரை நீதிமன்றக் காவ லில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மே 21-இல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்!
சென்னை, மே 14- காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் மே 21 அன்று பிற்பகல் 2.30  மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்நாடு,  கர்நாடகம், கேரளம்,  புதுச்சேரி அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

8 மாவட்டங்களில் கனமழை குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

சென்னை, மே 14- கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

மேலும், நீலகிரி, கோவை (மலைப் பகுதிகள்), தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், மே 18-ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 15 அன்று திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி (மலைப் பகுதிகள்), குமரி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.